தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மாற்றுதிறன் மாணவர்களுக்கு கற்பிக்கும் சிறப்பு பயிற்றுனர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்'

மாற்றுதிறன் மாணவர்களுக்கு கற்பிக்கும் சிறப்பு பயிற்றுநர்களை காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாற்றுதிறன்
மாற்றுதிறன்

By

Published : Jul 22, 2021, 11:29 PM IST

சென்னை:மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கற்பிக்கும் சிறப்பு பயிற்றுனர்கள் 1,691 பேரின் ஒரு நாள் சம்பளமான 4 லட்சத்து 60 ஆயிரத்தை சங்க நிர்வாகிகள், நேற்றைய தினம் (ஜூலை.21) அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் வழங்கினர்.

மேலும், சில கோரிக்கைகளை சங்க நிர்வாகிகள் வைத்தனர். அதில் சிறப்பு பயிற்றுனர்கள் கடந்த 20 ஆண்டுகளாக காலமுறை ஊதியம் இல்லாது, பணி நிரந்தரம் கிடைக்காமல், மிக வறுமையில் வாடி வருகின்றோம். முதலமைச்சர் எங்களை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து மாற்றுத் திறன் மாணவர்களின் கல்வியை அரசுப் பள்ளியில் உறுதிச் செய்திட வேண்டும்.

பணி நிரந்தரம் செய்வதில் எந்தவிதமான கூடுதல் செலவும் ஏற்படாது. எனவே காலமுறை ஊதியத்தில் பணி அமர்த்த வேண்டும். கடந்த ஆண்டுகளில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராடங்களையும் நடத்தி உள்ளோம். மாற்றுத்திறனாளிகள் துறையை தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர், மாற்றுதிறன் மாணவர்களுக்கு கற்பிக்கும் சிறப்பு பயிற்றுனர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும்.

இந்த சந்திப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நிர்வாகிகள், முதலமைச்சர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இருவரும் எங்கள் கோரிக்கையை கனிவுடன் பரிசு அளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கொடைக்கானல் - மூணாறு இடையே சாலை அமைக்க பேச்சுவார்த்தை - அமைச்சர் எ.வ.வேலு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details