சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ஏப்ரல் 9, 23, 26 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த தேதிகளில் சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டியை காண சிறப்பு ரயில்கள்- தெற்கு ரயில்வே அறிவிப்பு - தெற்கு ரயில்வே
சென்னை: சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காணச் செல்பவர்களுக்கு வசதியாக சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.45-க்கு புறப்படும் ரயில் சேப்பாக்கம் வழியாக 12.35-க்கு வேளச்சேரி சென்றடையும்.
இதேபோல், வேளச்சேரியில் இருந்து 11.25-க்கு புறப்படும் ரயில், சேப்பாக்கம் வழியாக சென்னை கடற்கரைக்கு 12.03-க்கும் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.