தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அத்தியாவசிய பணியில் ஈடுபடுபவர்களுக்கு சிறப்பு ரயில் சேவை - etv news

சென்னையில். அத்தியாவசிய பணியில் ஈடுபடுபவர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

அத்தியாவசிய பணியில் ஈடுபடுபவர்களுக்கு சிறப்பு ரயில் சேவை
அத்தியாவசிய பணியில் ஈடுபடுபவர்களுக்கு சிறப்பு ரயில் சேவை

By

Published : May 11, 2021, 5:47 PM IST

சென்னை: கரோனா பெருந்தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு கடந்த 10 ஆம் தேதி முதல் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில், மருத்துவம், ரயில்வே துறையில் பணிபுரிபவர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பணியாளர்களுக்காக சிறப்பு புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் வழக்கமான ரயில் சேவைகளை விட குறைவான ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் வரையில் இரு மார்க்கங்களிலும் 49 ரயில் சேவைகளும், சென்னை சென்ட்ரல் முதல் கும்மிடிப்பூண்டி வரை 25 ரயில்களும், சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி மார்க்கத்தின் இரண்டு வழித்தடங்களிலும் 20 ரயில் சேவைகளும், சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு/ திருமால்பூர் வழித்தடத்தில் 44 ரயில்களும், ஆவடி - பட்டாபிராம் - பட்டாபிராம் டிப்போ வழித்தடத்தில் இரு மார்க்கங்களிலும் ஆறு ரயில் சேவைகளும் இயக்கப்பட்டு வருகிறது.

ஒட்டுமொத்தமாக வாரநாட்களில் 288 சிறப்பு புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய பணியாளர்களுக்காக வழக்கமான ரயில்கள் இயக்கப்படுகிறது.

மத்திய மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், சென்னை உயர் நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள், போக்குவரத்து மற்றும் பார்சல் சேவையில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுக கழகத்தைச் சேர்ந்த ஊழியர்கள், இணைய விநியோக நிறுவன ஊழியர்கள், அச்சு மற்றும் காட்சி ஊடக ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் ஆகியோர் ரயிலில் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக, கூட்டம் இல்லாத நேரங்களில் பொதுமக்களுக்கும், அனைத்து நேரங்களிலும் பெண்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 10ஆம் தேதி முதல் அந்த அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதனால் ரயில்களில் அத்தியாவசிய பணியாளர்கள் கூட்ட நெரிசல் இல்லாமல், தகுந்த இடைவெளியை முறையாக கடைபிடித்து பயணம் செய்கின்றனர்.

அதே நேரத்தில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், ரயில்களின் கால இடைவெளியைப் பெரிதாக குறைக்கவில்லை என்பதால் ரயிலுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இல்லை என அத்தியாவசிய பணியாளர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக பேசுகையில், பயணிகள் செல்வதற்கான ஒற்றை பயண டிக்கெட் (Single ticket) மட்டுமே வழங்கப்படுகிறது, சென்று வருவதற்கான (Return to ticket) டிக்கெட்டுகள், மாதாந்திர பயண அட்டைகள் தமிழ்நாடு அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள பிரிவினருக்கு மட்டுமே வழங்கப்படுவதாக சென்னை கோட்ட ரயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தகுதியுடைய சிலருக்கு ரிட்டன் டிக்கெட் வழங்கப்படுவதில்லை என பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

சென்னையில் ரயில் சேவைகள் குறிப்பிட்ட வழித்தடத்தில் நிறுத்தப்படும், அதற்கு முன்பாக சிலர் ரயில் டிக்கெட் கேட்பதால் அதை வழங்க முடியவில்லை என சென்னை புறநகர் மின்சார ரயில் டிக்கெட் அலுவலர் கூறினார்.

இதையும் படிங்க:'பெருந்தொற்று காலத்தில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் தேவைதானா...'

ABOUT THE AUTHOR

...view details