சென்னை: பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில், "மாணவர்களின் தனித்திறன்களை மேலும் மெருகேற்றும் வகையிலும் கோடை விடுமுறையைப் பயனுள்ள வகையில் செலவழிக்கவும், கோடை கொண்டாட்டம் சிறப்பு பயிற்சி முகாம்கள் மழை சுற்றுலா தளங்களில் நடத்தப்படும்.
பள்ளி பாடங்களைத் தவிர்த்து சூழலியல், தலைமைத்துவம், மனித உரிமை, சமூகநீதி, பெண்ணுரிமை மற்றும் எதிர்காலவியல் (Futures studies) போன்றவற்றை வளர்க்கும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்படும் என சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.
அதனடிப்படையில் பள்ளிக்கல்வியைத் தவிர்த்து இயற்கையோடு இணைந்த ஒரு அனுபவக் கல்வியை அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக நீலகிரி மாவட்டத்தில் 5 நாள்கள் கோடை கொண்டாட்டம் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.
அரசு பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு முடித்துள்ள மாணவர்களில் கல்வி, இலக்கியம், அறிவியல், வினாடி வினா போட்டிகளில் சிறந்து விளங்கிய 1250 மாணவர்கள் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ள உள்ளனர்.
கோடை கொண்டாட்டம்: அரசு பள்ளி மாணவர்களின் தனித்திறனை ஊக்குவிக்க சிறப்பு பயிற்சி முகாம்... கோடை கொண்டாட்டம் சிறப்பு பயிற்சி மாணவர்களுக்கு உடற்பயிற்சி, செய்தித்தாள் மற்றும் இளைஞர்கள் வாசித்தல் உடல் மொழி சார்ந்த பயிற்சி அளித்தல் பள்ளி மாணவர்களுக்கு மேடைப்பேச்சு, தமிழ் திறன்களை வளர்க்கும் வகையில் கருத்துப்பரிமாற்றம் சார்ந்த பயிற்சிகள் வானியல் அறிதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
கொடைக்கானலில் நடைபெற்று வரும் இந்த பயிற்சி வகுப்பிற்காகத் தமிழ்நாடு அரசு 72 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து செலவு செய்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்
இதையும் படிங்க: கோடை விடுமுறையில் நடத்தும் ‘எண்ணும் எழுத்தும்’ வேண்டாம் - அதிருப்தியில் ஆசிரியர்கள்!