தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை-மும்பை சிறப்பு ரயில்! முன்பதிவு இன்று தொடக்கம் - Southern Indian railway

கோடைவிடுமுறை முன்னிட்டு ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தடுப்பதற்காக சென்னையிலிருந்து மும்பைக்கு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Special train chennai central to mumbai

By

Published : Apr 12, 2019, 10:41 AM IST

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. இதையடுத்து, குடும்பத்துடன் சுற்றுலா செல்லவும், தங்களது சொந்த ஊருக்கு செல்லவும் பயணிகள் பெரும்பாலும் ரயில் பயணத்தையே விரும்புவார்கள். ஏனென்றால், பயண களைப்பு தெரியாமல் இருப்பதற்கும், பணத்தை சேமிக்கவும் ரயில் பயணத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இதனால் ரயிலில் கூட்ட நெரிசல் அதிகமாகக் காணப்படும்.

இந்நிலையில், மும்பைக்கு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில் குறிப்பிட்டுள்ளதாவது: சிறப்பு கட்டணம் மூலமாக புரட்சித்தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் (சென்னை சென்ட்ரல்) நிலையத்திலிருந்து மும்பை சிஎஸ்எம்டி சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு,

ரயில் எண்: 01064 - புரட்சித் தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையத்திலிருந்து ஏப்ரல் மாதம் 18, 25ஆம் தேதிகளிலும், மே மாதம் - 02, 09, 16, 23, 30 ஆகிய தேதிகளிலும் மற்றும் ஜீன் மாதம் - 06, 13, 20, 27 ஆகிய தேதிகளிலும் மதியம் 15:15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை மும்பை சிஎஸ்எம்டிக்கு 16:30 மணிக்கு சென்றடைகிறது.

சென்னை-மும்பை சிறப்பு ரயில்

ரயில் நிறுத்தங்கள்: அரக்கோணம், ரேணிகுண்டா, ராஜம்பேட்டா, குத்தாப், ஏர்ரகுன்டாலா, தாதிபத்ரி, கூட்டி, குன்டகல், அதோனி, மந்த்ராலயம் ரோடு, ராய்சூர், யாதகிரி, வாடி, குல்பர்கா, சோலாப்பூர், தாவுந்த், பூனே, லோனாவலா, கல்யாண், தானே மற்றும் ததர்.

இதற்கான முன்பதிவு இன்று (12.04.2019) காலை 08.00மணிக்கு தொடங்கியது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details