சென்னை பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, பல ஆண்டுகளாக சிறப்பு ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று(ஜன.29) மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர்கள் திடீர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் சேதுராமன் கூறுகையில், ”நாங்கள் கடந்த 20 ஆண்டுகளாக மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வருகிறோம். எங்களுக்கு காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும். தஞ்சாவூர் மாவட்டம் சிறப்பு பயிற்றுநர் சுமதி மாற்றுத்திறனாளி மாணவரின் வீட்டிற்கு கல்வி கற்பிக்க சென்றபோது, அவரின் முதுகில் தென்னைகுலை விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும்.