தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள்: சென்னை மாநகராட்சி! - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய சிறப்பு முகாம்கள்  Special camps for the disabled to register on the voter list in chennai  register voter list Special camps in chennai  வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள்  மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள்  சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்  Chennai Corporation Commissioner Prakash
Special camps for the disabled to register on the voter list in chennai

By

Published : Jan 19, 2021, 9:44 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தின் உள்ளடங்கிய 16 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் 01.01.2021ஆம் தேதியினை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு 2021ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மூலம் வருகிற 21ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகளை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய சிறப்பு முகாம்கள், அந்தந்த கல்வி நிலையங்களிலும், மாற்றுத்திறனாளிகளுக்கான நிறுவனங்களிலும் நடத்தப்படவுள்ளன.

இவர்களுக்கு பிரத்யேகமாக 94999 33619 என்ற வாட்ஸ்அப் எண் நிறுவப்பட்டுள்ளது. இந்த எண் மூலம் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பயன்பெற்று தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். மேலும், 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தங்களின் விவரம், வாக்காளர் பட்டியலில் பதியப்பெற்றுள்ளனவா, திருத்தங்கள் ஏதேனும் மேற்கொள்ளப்பட வேண்டுமா என்பது போன்ற தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

மாற்றுத்திறனாளிகள் மேற்கூறிய திட்டங்களை பயன்படுத்தி தங்களது வாக்காளர் பட்டியலில் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம், திருத்தங்களும் மேற்கொள்ளலாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:’ஜனவரியில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்’: ஆட்சியர் செந்தில்ராஜ்

ABOUT THE AUTHOR

...view details