தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழாக் கால சிறப்பு பேருந்து அறிவிப்பும் மக்கள் கோரிக்கையும்.. போக்குவரத்து கழகத்தின் அறிவிப்பு என்ன? - specai busses from chennai

TNSTC Special Bus: விடுமுறை நாட்களை முன்னிட்டு கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 600 பேருந்துகளை இயக்க, திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் இன்று(அக்-06) தெரிவித்துள்ளது.

சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சிறப்பு பேருந்துகள் இயக்கம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 6, 2023, 6:43 PM IST

சென்னை:தினமும் இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 600 பேருந்துகள் இயக்க, திட்டமிடப்பட்டுள்ளது என்று அரசு விரைவு போக்குவரத்து கழகம் இன்று(அக்.06) தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த பேருந்தகள் போதுமானாதாக இருப்பதில்லை என்றும், கும்பகோணம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய இடங்களுக்கு போதுமான பேருந்துகள் இயக்கப்படவில்லை என்றும் பயணிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

சென்னையில் இருந்து, தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும், மேலும் முக்கிய போக்குவரத்து மண்டலங்களில் இருந்தும், வாரஇறுதி நாட்கள், தொடர் விடுமுறை, விழாக்காலங்கள் என்ற அடிப்படையில், தமிழ்நாடு போக்குவரத்து கழகம், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்ததன்படி, வாரஇறுதி நாட்களில் 600 பேருந்துகளும், தொடர் விடுமுறை காலங்களில் ஆயிரம் பேருந்துகளும், விழாக்காலங்களில் ஆயிரத்து 300 பேருந்துகளும் இயக்க்கப்பட்டுள்ளன என்று போக்குவரத்து கழகம் தெரிவித்தது.

ஆனால், போக்குவரத்து கழகம் ஒவ்வொறு முறையும் சிறப்பு பேருந்துகளின் இயக்கத்தை அதிகரித்தாலும், பேருந்துகள் போதுமானதாகவே இருப்பதில்லை என்று பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். தொடர் விடுமுறையோ அல்லது விழாக்காலமோ, அல்லது வாரஇறுதி என எதுவாக இருந்தாலும், சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

பிற மாவட்டங்கள் மட்டுமின்றி, திருவனந்தபுரம், பெங்களூரு, திருப்பதி போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும், சென்னையில் பெரும்பாலனோர் வேலை பார்க்கின்றனர். மேலும், விடுமுறை காலங்களிலும், விழாக்காலங்களிலும் மட்டுமின்றி, வார இறுதி நாட்களிலும், பயணிகளின் வசதிகளுக்காக, சென்னை கோயம்பேட்டில் இருந்து அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், அந்த பேருந்துகள் போதுமானதாகவே இருப்பதில்லை என்று பயணிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கின்றனர்.

ஆகஸ்ட் மாதத்தில், ஆயிரத்து 100 சிறப்பு பேருந்துகளும், செப்டம்பர் மாதத்தில், 2 ஆயிரத்து 350 சிறப்பு பேருந்துகளும், அக்டோபர் மாதத்தில், (இன்று அக்.06) 600 சிறப்பு பேருந்துகள், தமிழகம் முழுவதும் இயக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒவ்வொறு முறையும், இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கையை ஒப்பிட்டு பார்க்கையில், சிறப்பு பேருந்துக்கள் மிகவும் குறைவாக இருக்கிறது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் விநாயகர் சதுர்த்தி, மிலாடிநபி, இம்மாதம் காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை வந்ததால், ஆயிரத்து 100 பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் ஒவ்வொறு முறையும் பேருந்து இயக்கும், முக்கிய நகரங்களுக்கும் மட்டும் குறிப்பாக, மதுரை, திருநெல்வேலி, கோவை, திருச்சி, சேலம், உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் மட்டும் இயக்கப்படுவதாகவும், மேலும் கும்பகோணம், தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய இடங்களுக்கு போதுமான பேருந்துகள் இயக்கப்படுவது இல்லை என்று பயணிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப, பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்வதற்கு, இதுவரை 5 ஆயிரத்து 896 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர் என்று அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

இதையும் படிங்க:சென்னை மெட்ரோ: 10 சதவீத சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைந்துள்ளதாக தகவல்!

ABOUT THE AUTHOR

...view details