சென்னை: தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், பண்டிகை காலங்களில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல எதுவாக சென்னையிலிருந்து 10,518 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஒவ்வொரு நாளும் தினசரி இயக்கும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 4,218 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
21, 22 ,23 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து மட்டும் மொத்தம் 10,518 சிறப்பு பேருந்துகளும் பிற ஊர்களிலிருந்து 6,370 பேருந்துகள் என மொத்தம் 16,888 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மாதவரம், கேகே நகர், தாம்பரம் மெப்ஸ், தாம்பரம் ரயில் நிலைய நிறுத்தம், பூவிருந்தவல்லி, கோயம்பேடு ஆகிய நிறுத்தங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும்.
9445014450, 9445014436 ஆகிய எண்களில் பேருந்து இயக்கம் குறித்தும், அரசு பேருந்துகள் தொடர்பான புகார்களை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 044-24749002, 044-26280445, 18004256151 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிக்காத வாறு நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுவரை 38,000 பேர் சென்னையிலிருந்து பிற பகுதிக்கு செல்ல முன்பதிவு செய்துள்ளனர். அதேபோல் பிற ஊர்களிலிருந்து சென்னை வருவதற்கு 18,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். அதேபோல் 24 ம் தேதி முதல் 26 ம் தேதி வரை பிற பகுதிகளிலிருந்து சென்னை வர 13,152 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
முன்பதிவு பொறுத்தவரையில் கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ் உள்ளிட்ட இடங்களில் முன் பதிவு செய்து கொள்ளாமல். அதேபோல் TNSETC செயலி வாயிலாகவும், இணையதள வாயிலாகவும் டிக்கெட் புக் செய்துகொள்ளலாம். 21ம் தேதி முதல் 26 தேதி வரை சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு 24 மணிநேரமும் மாநகர இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
500 பேருந்துகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது, மேலும் 2,000 பேருந்துகளில் காமிராக்கள் பொறுத்தும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு ஆவினில் இனிப்புகள் கொள்முதல் செய்யப்படும்.
ஈ.பேருந்து டெண்டர் விடப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு ஆயுத பூஜைக்கு வழக்கமான வருவாயை விட 25 விழுக்காடு கூடுதலாக வருவாய் கிடைத்துள்ளது. பேருந்துகள் குறிப்பான புகார்கள் ஏதாவது இருந்தால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்க தீவிரவாத தடுப்பு படை அவசியமில்லை - சென்னை உயர் நீதிமன்றம்