தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்புப் பேருந்து!

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக 63 வழித்தடங்களில் 109 பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து

By

Published : Jun 8, 2020, 12:56 AM IST

கரோனா வைரஸ் தாக்கத்தால் இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழ்நாடு முழுவதும் வருகின்ற ஜூன் 15ஆம் தேதி நடைபெற உள்ளது.

சென்னையில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால், பொதுப் போக்குவரத்துக்கு இன்னும் தடை நீடித்து வருகின்றது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்திருந்தது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்புப் பேருந்து
இது தொடர்பாக மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கோ. கணேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நுழைவுச் சீட்டை பெறுவதற்காக ஜூன் 8 முதல் 13-ஆம் தேதி வரை 63 வழித்தடங்களில் 109 மாநகரப் போக்குவரத்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இச்சிறப்புப் பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம். இதில் ஆசிரியர்கள் பயணச்சீட்டு பெற்று பயணிக்க வேண்டும்' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 9 மணி அளவில் பேருந்துகள் புறப்பட்டு, மாலை 4 மணி அளவில் மறுமுனையில் இருந்து பேருந்துகள் புறப்பட பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்புப் பேருந்து
இந்த சிறப்புப் பேருந்துகளில் 24 பயணிகள், அதாவது 60 விழுக்காடு பேர் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் பேருந்துகளில் பின்புறமாக ஏறி, முன்புறமாக இறங்க வேண்டும்' எனத் தகவல் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details