எஸ்பிபி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் - SPB
17:47 September 24
SPB
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
எஸ்பிபி கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி, கரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திரைத்துறை பிரபலங்கள் முதல் தமிழ்நாடு மக்கள் அனைவரும் அவர் உடல்நலம் பெற பிரார்த்தனைகள் மேற்கொண்டனர். அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 24 மணிநேரமாக அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
சமூக வலைதளங்களில் #prayforspb என்ற ஹேஷ்டேக்கில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.