தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்ணீர் லாரி உரிமையார் சங்கத்தினரோடு எஸ்.பி வேலுமணி ஆலோசனை - எஸ்பி வேலுமணி

சென்னை: தண்ணீர் விநியோகிப்பதில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக  உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கத்தினரோடு ஆலோசனை நடத்தினார்.

எஸ்.பி வேலுமணி

By

Published : Jun 25, 2019, 8:03 AM IST

இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் அரசு முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங், நகராட்சி நிர்வாக ஆணையர் கார்த்திக்கேயன், மாநகர கூடுதல் காவல் ஆனையர் அருண், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் ஆட்சியாளர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி,

"தமிழ்நாட்டில் 142 வருடங்களாக இல்லாத தண்ணீர் பஞ்சம் 2017இல் வந்த போது சென்னைக்கு 450 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டது. தற்போது நீர் நிலைகள், குவாரிகள் என்று அனைத்து இடங்களிலும் தண்ணீர் பெறப்பட்டு 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநோயகிக்கப்பட்டு வருகிறது. இதில், தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சார்பில் 6000 தண்ணீர் லாரிகள் இயங்கிவருகின்றன. நாள் ஒன்றுக்கு 18 ஆயிரம் முறை பயணம் செய்து தண்ணீர் விநியோகித்து வருகின்றனர். இவர்கள் வெகு தொலைவில் சென்று தண்ணீர் எடுத்து வருவதால் கூடுதல் லாபத்தை வைத்து தண்ணீர் விநியோகிக்கன்றனர்.

எனவே அவர்களிடம் தமிழ்நாட்டில் மிகுந்த தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் குறைந்த லாபத்துடன் சேவை மனப்பான்மையில் தண்ணீர் வழங்க வேண்டும் என்ற பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்துள்ளது.

ஒன்று அல்லது இரண்டு இடங்களில்தான் அதிக லாபத்துக்கு தண்ணீர் விநியோகிப்பதாக கூறியுள்ளனர். மேலும் அவர்கள் குழு அமைத்து அதிக கட்டணம் வசுலிப்பதை தடுத்து வருவதாகவும் கூறினார்கள். எனவே அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் மக்கள் லாரி உரிமையாளர்களின் குழுவுக்கோ அல்லது மெட்ரோ குடிநீர் வாரிய தலைவரிடமோ புகார் அளிக்கலாம்.

அதன் பேரில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். மழைநீர் சேகரிப்பு அனைத்து வீடுகளிலும், அலுவலகங்களிலும் இருப்பதை ஆய்வு செய்ய குழு அமைத்துள்ளோம். மழைநீரை வீநாக்காமல் வீடுகள் அலுவகங்களில் மழை நீர் சேமிப்பு திட்டத்தை பொருத்தி மழைநீரை சேமிக்க வேண்டும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details