தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்...! - மலை ரயில் பாதை

நீலகிரி மலை ரயில் பாதை அருகில் கொட்டப்பட்டிருந்த 2 ஆயிரத்து 387 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

southern railway reported to chennai high court  plastic waste removed form reserved forest  chennai high court  southern railway  plastic waste  தெற்கு ரயில்வே  சென்னை உயர் நீதிமன்றம்  பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றல்  பிளாஸ்டிக் கழிவுகள்  வனப்பகுதி  மலை ரயில் பாதை  மலை ரயில் பாதையில் பிளாஸ்டிக் கழிவுகள்
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Mar 1, 2022, 6:42 AM IST

சென்னை:ஊட்டி, கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்தக் கோரிய வழக்குகள், நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் நேற்று (பிப். 28) விசாரணைக்கு வந்தன.

அப்போது, தெற்கு ரயில்வே தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஊட்டி செல்லும் நீலகிரி மலை ரயிலில், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் கொண்டு செல்ல தடை அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், பதிலாக தண்ணீர் கேன்கள் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், நீலகிரி மலை ரயில் பாதையில் கொட்டப்பட்டிருந்த 2 ஆயிரத்து 387 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ரயில் பாதையில், யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டிருந்த சுவர் முழுமையாக இடிக்கப்பட்டு, கட்டிட கழிவுகளும் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனை கேட்ட நீதிபதிகள், இதுசம்பந்தமாக அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டனர். மேலும் இந்த விசாரணையை மார்ச் 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: ஜெயக்குமாருக்கு மார்ச் 11 வரை நீதிமன்ற காவல்

ABOUT THE AUTHOR

...view details