தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவலர்கள் டிக்கெட் எடுக்காமல் ரயிலில் தொடர்ந்து பயணம்: கடுப்பான தெற்கு ரயில்வே நிர்வாகம் - காவலர்கள் இனி ரயிலில் அடையாள அட்டையை காண்பித்து செல்ல முடியாது

ரயிலில் டிக்கெட் எடுக்காமல் அடையாள அட்டையைக் காண்பித்து பயணிக்கும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு டிஜிபி-க்கு தெற்கு ரயில்வே கடிதம் அனுப்பியுள்ளது.

தெற்கு ரயில்வே கடிதம்
தெற்கு ரயில்வே கடிதம்

By

Published : Feb 24, 2022, 6:29 PM IST

சென்னை:தமிழ்நாடு காவலர்கள் சிலர் ரயிலில் பயணிக்கும்போது டிக்கெட் எடுக்காமல் அடையாள அட்டையைக் காண்பித்து பயணிப்பதாக தமிழ்நாடு டிஜிபி, சென்னை காவல் ஆணையர் மற்றும் ரயில்வே கூடுதல் ஆணையர் அலுவலகத்திற்கு தெற்கு ரயில்வே கடிதம் அனுப்பியுள்ளது.

அதிகப்படியான புகார்

அந்தக் கடிதத்தில், "ரயில்களில் அடையாள அட்டையைக் காண்பித்து தமிழ்நாடு காவலர்கள் பயணிப்பதாக ரயில்வே நிர்வாகத்திற்கு அதிகப்படியான புகார்கள் வருகின்றன.

தெற்கு ரயில்வே கடிதம்

எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் காவலர்கள் டிக்கெட் எடுக்காமல், அடையாள அட்டையைக் காண்பித்து ஏற்கெனவே புக் செய்த பயணிகளின் சீட்டுகளிலும், முதல் மற்றும் இரண்டாம் கோச்களிலும் பயணிக்கின்றனர். குறிப்பாக காவலர்களிடம் டிக்கெட் பரிசோதகர் பயணச்சீட்டு ஆவணங்களைக் கேட்டால், அடையாள அட்டையை காண்பித்து தொடர்ந்து பயணிக்கின்றனர்.

காவலர்கள் மீது நடவடிக்கை

இதனால் பயணச்சீட்டு குறித்த ஆவணங்களை உடனடியாக காவலர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதுபோன்று பயணிக்கும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரயில் பயண பாஸ் காவலர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஆனால், குறைவான எண்ணிக்கையில் பாஸ் வருவதால், இதுபோன்று பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:ரஷ்யாவின் 5 விமானங்கள், 1 ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது; உக்ரைன்

ABOUT THE AUTHOR

...view details