தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை! - இடி, மின்னலுடன் கூடிய முதல் மிதமான மழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை
மழை

By

Published : May 3, 2021, 7:45 PM IST

Updated : May 3, 2021, 8:17 PM IST

சென்னை:கேரளா மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் ஒரு கிலோ மீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (மே.2) மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய முதல் மிதமான மழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழ்நாட்டின் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

நாளை மற்றும் நாளை மறுநாள் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 6, 7 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால், காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும். இதன் காரணமாக மாலை முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதன் காரணமாக மாலை முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு

  • நீலகிரி, குன்னூர் -11 செ.மீ
  • நீலகிரி, டிஆர்எம்எஸ் -9 செமீ
  • தென்காசி, அலகாரி எஸ்டேட் மற்றும் நீலகிரி , கோத்தகிரி எஸ்டேட் -தலா 7 செ.மீ
  • நீலகிரி, பர்லியார் -6 செமீ
  • தேனி, பெரியகுளம் மற்றும் நாகப்பட்டினம் -5 செமீ
  • ராமநாதபுரம், கடலாடி, சிவகங்கை- 4 செமீ
  • விருதுநகர், கோவிலான்குளம் மற்றும் கன்னியாகுமாரி, பெருஞ்சாணி அணை- தலா 3 செமீ
  • ஈரோடு, பவானிசாகர், திருவாரூர் 2 செமீ

மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

Last Updated : May 3, 2021, 8:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details