சென்னை:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தலைவர் மற்றும் 11 உறுப்பினர்கள் இல்லாமல் தள்ளாடி வருகிறது. மேலும் 13 உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டிய ஆணையத்தில் தற்போது இரண்டு பேர் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர். தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிடங்களை அரசு நிரப்பாமல் உள்ளதால் பெரும்பான்மை இல்லாமலும், முடிவு எடுக்க முடியாமலும் அரசு தினறி வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் பொதுத்துறைக்கான பணியாளர்களை தேர்வு செய்து நேரடியாக நியமனம் செய்யும் முக்கியமான பணியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் செய்து வருகிறது. இதற்கான தலைவர் மற்றும் போதிய உறுப்பினர்கள் இல்லாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. 4 உறுப்பினர்களில் ஒருவர் தற்காலிக தலைவர் பொறுப்பை வகிக்கும் நிலையில், மீதம் இருக்கும் 3 உறுப்பினர்களில் கிருஷ்ணகுமார் இன்று ஓய்வு பெறுகிறார்.
இந்த அமைப்பில் தலைவர் மற்றும் 13 உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால் பல மாதங்களாக உறுப்பினர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. தலைவர் பணியிடமும் நிரந்தரமாக நிரப்பப்படவில்லை. தற்போதைய நிலவரப்படி, மொத்தம் உள்ள 4 உறுப்பினர்களில், உறுப்பினர் முனியநாதன் தற்காலிக தலைவர் பதவியை வகித்து வருகிறார்.