குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுபவர்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பத்ம ஸ்ரீ விருது தமிழ்நாட்டைச் சேர்ந்த சாலமன் பாப்பையா, அனிதா, சுப்பு ஆறுமுகம், ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்ட 102 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 பேர் பத்ம விருதுகளுக்கு தேர்வாகியுள்ளனர்.
சாலமன் பாப்பையாவிற்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிப்பு - சாலமன் பாப்பையா பத்ம ஸ்ரீ விருது அறிவிப்பு
சாலமன் பாப்பையா உள்பட தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
solomon papaiya
பேராசிரியர் சாலமன் பாப்பையா திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார். இவர் தற்போது 84 வயதை எட்டியுள்ள நிலையில், பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.