தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல், 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலை முன்னிட்டு, அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மோடியை பிரதமராக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர் - ஸ்மிருதி இரானி - chennai
சென்னை: மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் சாம் பாலை ஆதரித்து பாஜக மத்தியமைச்சர் ஸ்மிருதி இரானி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
இந்நிலையில், மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் பாமக வேட்பாளராக போட்டியிடும் சாம்பாலை ஆதரித்து பாஜக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பூக்கடை பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, அவரை வரவேற்கும் விதமாக, பாஜக வாசகங்கள் இந்தியில் பொறிக்கப்பட்டும், தொப்பிகளை அணிந்தும், கொடிகள், தோரணங்கள் வைத்தும் அப்பகுதியினர் வரவேற்றனர்.
மேலும், இப்பகுதியில் பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் வசிப்பதால், ஹிந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அதிமுகவின் கூட்டணிக்கட்சியினர் பரப்புரையில் ஈடுபட்டனர். கடும் வெயிலிலும், பெண்கள், சிறுவர்கள் என பலரும் கொடிகள் பிடித்தபடி வரவேற்றனர். பெரும்பாலும் வட இந்திய மக்கள் அதிகமாக குவிந்திருந்தனர்.