தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் சிறு விளையாட்டு அரங்கம்

209 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என விளையாட்டு மேம்பாட்டுத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

small-sports-stadium-for-each-assembly-constituency
small-sports-stadium-for-each-assembly-constituency

By

Published : Sep 3, 2021, 4:41 PM IST

சென்னை: விளையாட்டு வசதிகள் இல்லாத அனைத்துச் சட்டப்பேரவைத் தொகுதிகளில் தலா மூன்று கோடி ரூபாய் செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள் நிறுவப்படும் என்று கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், "மாநிலம் முழுவதும் விளையாட்டு நடவடிக்கைகளைப் பரவலாகப் அதற்காக அனைத்துச் சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேவைக்கேற்றவாறு சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிதிநிலை அறிக்கையின்போது விளையாட்டு வசதிகள் இல்லாத அனைத்துச் சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மூன்று கோடி ரூபாய் செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள் நிறுவப்படும்.

சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திலிருந்து ஒரு பகுதியை நோக்கத்திற்காகப் பயன்படுத்துமாறு ஊக்குவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

தற்போது 25 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 25 சிறு விளையாட்டு அரங்குகள் உள்ளன. மீதமுள்ள 209 சட்டப்பேரவைத் தொகுதிகளில் விளையாட்டு வசதி இல்லாத இடங்களில் மூன்று கோடி ரூபாய் செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள் படிப்படியாக அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 75 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பயன்படுத்த தடை

ABOUT THE AUTHOR

...view details