தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குநர் பதிலளிக்க உத்தரவு! - குடிசை மாற்று வாரியம்

சென்னை: மந்தைவெளியில் குடிசை வீடுகளை காலி செய்ய உள்ள 110 குடும்பங்களுக்கு குறைந்தபட்ச வாடகையாக தலா 10 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு தொடரப்பட்ட வழக்கில் குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குநர் பதிலளிக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணையம்
மனித உரிமைகள் ஆணையம்

By

Published : Oct 1, 2020, 6:42 PM IST

சென்னை மந்தைவெளி குப்பைமேடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு மக்கள் சார்பாக, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதில், தங்கள் பகுதியில் உள்ள 500 குடும்பங்களில், 330 வீடுகள் குடிசை மாற்று வாரிய கட்டிடங்களாகவும், அதனை சுற்றி 110 குடிசை வீடுகளில் வசித்து வருகிறோம்.
இந்நிலையில், பழுதடைந்த குடிசை மாற்று வாரிய கட்டடங்களை இடித்துவிட்டு புதிதாக 500 வீடுகள் கட்ட இருப்பதால், போதிய கால அவகாசம் வழங்காமல் உடனடியாக வீடுகளை காலி செய்ய வேண்டும் என அலுவலர்கள் உத்தரவிட்டனர்.
கரோனா தாக்கத்தால் வேலை, வருவாய் இழந்து, பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உடனடியாக மாற்று இடத்துக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளோம். அதனால், புதிய வீட்டிற்கு செல்ல ஏதுவாக 110 குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வாடகையாக தலா 10 ஆயிரம் ரூபாய் பணமும், இடத்தை காலி செய்ய 6 மாத கால அவகாசமும் வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணைய பொறுப்பு தலைவர் துரை. ஜெயச்சந்திரன், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குநர் இரு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details