இது குறித்து, பதிவாளர் குமார் கூறுகையில், "அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் அங்கீகாரம் பெற்று தற்பொழுது 41 சுயநிதி பொறியியல் கல்லூரிகள் தன்னாட்சி அங்கீகாரத்துடன் இயங்கி வருகிறது. தன்னாட்சி வழங்குவதால் கல்லூரியில் குறிப்பிட்ட வரையறைக்குள் தங்களின் பாடத்திட்டத்தை வகுத்துக் கொள்ளவும், தேர்வினை நடத்தவும், கல்வியின் தரத்தை உயர்த்தவும் முடியும்.
ஆறு தனியார் பொறியியல் கல்லூரிக்கு தன்னாட்சி அங்கீகாரம்!
சென்னை: தமிழ்நாட்டில் இயங்கி வரும் ஆறு தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக் கழகம் தன்னாட்சி அங்கீகாரம் வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது.
அதன் அடிப்படையில், சென்னை ஜெருசலேம் பொறியியல் கல்லூரி, வேல்டெக் மல்டி டெக் டாக்டர் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா பொறியியல் கல்லூரி, வேலம்மாள் பொறியியல் கல்லூரி, கோவை ஸ்ரீ சக்தி இன்ஸ்டியூட் ஆப் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலாஜி, கோவை பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம், பி.ஏ.கல்லூரி ஆப் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலாஜி ஆகிய ஆறு பொறியியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரிகள் 2019 ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் தன்னாட்சியுடன் செயல்படும்.
தன்னாட்சி பெற்ற கல்லூரியில் நடத்தப்படும் அனைத்து நடவடிக்கையினை கண்காணிக்க அண்ணாப் பல்கலைக் கழகம், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்கம், பல்கலைக் கழகத்தின் மானியக்குழுவில் இருந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்", என்றார்.