தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ ட்ரெய்லர் வெளியானது! - சினிமா செய்திகள்

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள, "டாக்டர்" திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது.

sivakarthikeyan  doctor trailer  sivakarthikeyan doctor movie trailer released  doctor trailer release  cinema news  movie update  latest tamil movie  புதிய திரைப்படம்  டாக்டர் ட்ரெய்லர்  டாக்டர் ட்ரெய்லர் வெளியானது  சினிமா செய்திகள்  சினி அப்டேட்
டாக்டர்

By

Published : Sep 25, 2021, 7:03 PM IST

'கோலமாவு கோகிலா' படத்தை இயக்கிய நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'டாக்டர்'. இப்படத்தில் சிவகார்த்திகேயன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் இன்று (செப்.25) வெளியாகியுள்ளது. படம் வருகின்ற அக்டோபர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

டாக்டர் ட்ரெய்லர் வெளியானது

‘டாக்டர்’ ட்ரெய்லர்

சிவகார்த்திகேயன் தனது எஸ்.கே. புரொடக்‌ஷன் நிறுவனம் சார்பில் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

முன்னதாகவே இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. ஆனால், கரோனோ தொற்று காரணமாகத் திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் திரைப்படம் வெளியாகவில்லை.

இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தது. ஆனால், இது குறித்த எந்த அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், டாக்டர் படக்குழு, அடுத்த மாதம் 9ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்தது. இதன் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதையும் படிங்க: எஸ்பிபி மறைந்த தினம்: நினைவுகூர்ந்த மோகன்லால், மம்மூட்டி!

ABOUT THE AUTHOR

...view details