தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை இயக்கி செல்பவர்கள் விபத்தில் சிக்கும் போது தலையில் அடிபட்டு உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு வருவதை தடுக்க, இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தலைக்கவசம் அணிய வலியுறுத்தி காவல் துறையினர் பேரணி - தலைக்கவசம் பேரணி
சிவகங்கை: காரைக்குடியில் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி காவல் துறையினர் இருசக்கர வாகன பேரணி நடத்தினர்.
police rally
இதனையடுத்து, தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி மாவட்ட காவல் துறை சார்பில், இருசக்கர வாகன பேரணி நடத்துவதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டிருந்தார்.
அதனடிப்படையில் இன்று காரைக்குடியில், காவல் கண்காணிப்பாளர் அருண் தலைமையில், இருசக்கர வாகன பேரணி நடத்தப்பட்டது. பேரணியில் கலந்துகொண்ட அனைத்து காவலர்களும் தலைக்கவசம் அணிந்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டனர்.