சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”மக்களவைத் தேர்தல் முடிவடைந்துள்ளது. பிற மாநிலங்களில் செய்ய இயலாத செயலை தி.மு.க தலைவர் ஸ்டாலின் செய்துள்ளார். மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகளை ஒன்றிணைத்து வழிநடத்தியதன் விளைவுதான் இந்த மாபெரும் வெற்றி. அவருக்கு நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். இது போன்ற கூட்டணி மற்ற மாநிலங்களில் அமையாத காரணத்தால் பா.ஜ.க வெற்றிபெற்றுள்ளது.
புல்வாமா, பால்கோட் தாக்குதலை முன்மொழிந்து மக்களின் வாழ்வாதார பிரச்னை, வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் தற்கொலை, பொருளாதார வீழ்ச்சி, சிறு குறு தொழில்கள் நசுக்கப்பட்டது போன்ற பிரச்னைகளை மறைத்து பிரசாரம் செய்து பா.ஜ.க வெற்றிபெற்றுள்ளது. தேர்தலில் 27 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ததாக பா.ஜ.கவே கூறியுள்ளது. நரேந்திர மோடி சிறந்த தலைவர் என்ற தோற்றத்தை தேர்தல் ஆணையமும், ஊடகங்களும் உருவாக்கின. 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும் விவிபேட் இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்துள்ளன. இதுபற்றி முழு தகவல் கிடைத்தபின்னர் மதச்சார்ப்பற்ற ஜனநாயக கட்சியினரோடு கலந்து ஆலோசித்து நடவடிக்கைகள் எடுக்க ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.