தமிழ்நாடு

tamil nadu

'காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அச்சுறுத்தல்?'

By

Published : Jul 11, 2019, 7:00 PM IST

சென்னை: மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள 'ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம்' சட்டத் திருத்த மசோதா காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவிடக் கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

stalin

மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் தண்ணீர் சிக்கலைத் தீர்த்துவைக்க 'ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம்' அமைக்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள 'ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம்' சட்டத் திருத்த மசோதா, உச்ச நீதிமன்றத்தின் காவிரி இறுதித் தீர்ப்புக்கும், அதன்படி அமைக்கப்பட்டுள்ள காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்துக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவிடக் கூடாது.

இதே மசோதா 2017ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டதாகும். ஆனால், அதனை மீண்டும் கொண்டுவர வேண்டும் என மத்திய அமைச்சரவை விடாப்பிடியாக ஒப்புதல் அளித்துள்ளது.

அதேபோன்று, மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவாச் சட்டத்தில், நடுவர் மன்றத் தீர்ப்புகளை மத்திய அரசு, அரசிதழில் வெளியிட வேண்டும் என்றிருந்த விதி, ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் ரத்து செய்யப்பட்டிருந்தது.

இந்த விதியானது தற்போதைய மசோதாவில் சேர்க்கப்பட்டால், அது மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப் சிக்கல்களை நீண்டகாலம் இழுத்தடிக்கும் திட்டமாகிவிடும் என்ற சந்தேகம் எழுகிறது.

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே நியாயவிலைக் கடை அட்டை, ஒரே மின்சார விநியோகம், ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம் என்பது அனைத்தையும் மையப்படுத்தும் முயற்சியாகும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details