சென்னை: தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையினால் தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கையானது கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒருங்கிணைந்த யானைகளின் கணக்கெடுப்பு அறிக்கை மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பிலான அறிக்கையை, இன்று (ஆகஸ்ட் 8ஆம் தேதி) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் வெளியிட்டார்.
தமிழக வனத்துறை, அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக அரசுகளின் ஒத்துழைப்போடு ஒருங்கிணைந்த யானைகளின் கணக்கெடுப்பை, கடந்த மே மாதம் 17.5.2023-ல் தொடங்கி 19.5.2023 வரை நடத்தியது. இந்த கணக்கெடுப்பு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் யானைகள் திட்ட இயக்குநரகத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள 26 வனத் தொகுதிகளில் உள்ள தொகுதி கணக்கெடுப்பு முறை மற்றும் தரவுகளின் அடிப்படையில், நேரடி மற்றும் மறைமுக முறைகளை உத்திகளை பயன்படுத்தி யானைகளின் எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது.
பொதுவாக நீர்நிலைகளுக்கு அருகில் காட்டு விலங்குகள் அதிகம் காணப்படுவது வழக்கம். அதிலும் யானைகள் அதிகம் நேரடியாக காணப்படுகின்றது. நேரடியாக காணப்படுகின்ற யானைகளின் எண்ணிக்கை தகவல்களை அடிப்படையாக கொண்டு யானைகளின் இனத்தொகை கட்டமைப்பினை ஆராய்வதையும் முக்கிய உள்ளீடாக வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையின்படி, 2017ஆம் ஆண்டில், 2,761 ஆக இருந்த யானைகளின் எண்ணிக்கை தற்போது 2961 ஆக அதிகரித்து உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மற்ற நான்கு யானைகள் காப்பகங்களுடன் ஒப்பிடும்போது, நீலகிரி கிழக்குத் தொடர்ச்சி மலை யானைகள் காப்பகத்தில் அதிக எண்ணிக்கையிலான யானைகள் உள்ளன, அதாவது 2477 யானைகளை கொண்டு உள்ளது.
புலிகள் காப்பகத்தில் இருக்கும் யானைகளின் எண்ணிக்கை பின்வருமாறு பட்டியல் பின்வருமாறு.
இந்த கணக்கெடுப்பின்படி, ஆண் யானை மற்றும் பெண் யானையின் சதவீதம் 1 : 2.17 ஆகவும், கிழக்குத் தொடர்ச்சி மலையில் 1105 யானைகளும், மேற்குத் தொடர்ச்சி மலையில் 1855 யானைகளும் உள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலையை விட மேற்கு தொடர்ச்சி மலையில் யானைகள் அதிகமாக காணப்படுகிறது.