சென்னை:குடும்ப பிரச்சினை காரணமாக, சிவகார்த்திகேயன் திரைப்பட நடிகர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சிவகார்த்திகேயன் திரைப்பட நடிகர் தூக்கிட்டு தற்கொலை!
குடும்ப பிரச்சினை காரணமாக, சிவகார்த்திகேயன் திரைப்பட நடிகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
சென்னை மயிலாப்பூர், நொச்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் திரைபட நடிகர் தென்னரசு. இவர், சிவகார்த்திகேயன் நடித்த 'மெரினா' திரைப்படத்தில் துணை நடிகராக நடித்துள்ளார். இவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு பவித்ரா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு வயதில் குழந்தை ஒன்று உள்ளது.
மதுபழக்கத்திற்கு அடிமையான தென்னரசு, தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அவ்வப்போது, கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தென்னரசு மனைவியைத் தாக்கினார். இதைத்தொடர்ந்து, கண்ணகி நகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு பவித்ரா சென்றார். தொடர்ந்து, கணவர் மீது காவல் நிலையத்தில் புகாரும் அளித்தார்.
மனைவி, தன் மீது புகார் அளித்துவிட்டதாக தென்னரசு மனமுடைந்து அதிகளவிலான மது அருந்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்றிரவு (செப்.28) திடீரென்று தென்னரசு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மைலாப்பூர் காவல்துறையினர் தென்னரசு உடலை கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.