தாம்பரம் சானடோரியத்தில் உள்ள, தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர் மீனாகுமாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கரோனா வைரஸ் தாக்காமல் இருக்க, உடல் வலிமையையும், நோய்த் தடுப்பாற்றலையும் அதிகரிக்கும் வகையிலான, உணவு வகைகளி பட்டியல், நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதனைப் பின்பற்றி மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளலாம்.
கரோனா பாதிப்பாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களை பாதுகாக்கும் சுகாதார நெறிமுறைகள் குறித்து இந்நிறுவனத்தில் உள்ள மருத்துவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 270 மருத்துவர்கள் மற்றும் சித்த மருத்துவப் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் பயிற்சி பெற்று, கரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணிபுரியத் தயாராக உள்ளனர்.