இந்தியாவில் ஹோமியோபதி மருத்துவம் காலூன்றிய பிறகு சித்த மருத்துவத்திற்கான வேலை குறைந்தது. தற்போது நீடித்து வரும் கரோனா பாதிப்பு மக்களை அச்சுறுத்தி வருகிறது. தொற்றால் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவதில்லை, நோய்வாய்ப்பட்ட பெரியவர்களைத் தான் தாக்குகிறது என்ற பேச்சு பரவலாகவே இருந்தது. இந்த இக்கட்டான சூழலில், கரோனா போரை எதிர்த்து போராட கூடிய சூழலுக்குத் தள்ளப்பட்டது சித்த மருத்துவம்.
கரோனாவுக்கு பதிலடி கொடுக்கும் முன்பே வைக்கப்பட்ட முக்கிய கேள்வி, இந்த கரோனா தொற்று சாதாரண காய்ச்சல் கிடையாது, இது புதுவிதமான வைரஸ், இதனை எப்படி கையாள்வது என்பதே தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறோம். இதில், சித்த மருத்துவம் என்ன சாதனைகள் செய்திட முடியும் என அலோபதி மருத்துவர்கள் கருத்து தெரிவித்தனர். நுண்ணறிவு ஆய்வறிக்கை போன்றே, சித்த மருத்துவ ஆய்வாளர்கள் சற்று நெருக்கடியை சந்தித்தனர் என்றே தெரிவிக்கலாம். ஆனால், துவண்டு போகவில்லை, அயராது உழைத்து தாங்கள் யார் என்பதை சித்த மருத்துவர்கள் நிரூபித்துவிட்டனர்.
அந்த வகையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜவகர் பொறியியல் கல்லூரியில் கரோனா பாதிப்பாளர்களுக்கு சித்த மருத்துவத்தின் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சை பெறும் நபர்கள் யாரும் இதுவரை இறக்கவில்லை என்பதே மகிழ்ச்சி செய்தி. இந்நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் பிரதாப் ரெட்டி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சித்த மருத்துவத்துவம் மூலம் பூரண குணமடைந்துள்ளார்.
71 வயதில் கரோனாவை வென்றவருடைய அனுபவங்களை அவரது உதவியாளர் கூறியதாவது, "ஜூலை 28ஆம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தமிழ்நாட்டு நண்பர்கள் மூலம் இந்த மருத்துவமனையில் சேர்ந்தோம். பத்து நாள்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்றோம். தற்போது எந்தவித மூச்சுத்திணறல் பிரச்னையும் இல்லை. வழக்கமாக தனது பணியை மேற்கொண்டு வருகிறார். ஆக்சிஜன் அளவு 98, 99 என்ற நிலையில் உள்ளது. ரத்தத்தில் இருந்த பிரச்னைகளும் குறைந்து சாதாரண அளவிற்கு வந்துள்ளன.
அவருக்கு மொழி பிரச்னை இருந்ததால் உதவிக்கு நானும் மருத்துவமனையிலேயே தங்கியிருந்தேன். முழு உடல் கவசம் எதுவும் போடாமல் முகக்கவசம் மட்டுமே அனைவரும் அணிந்திருந்தனர். கடந்த 5 மாதமாக மருத்துவமனையில் பணிபுரிபவர்களுக்கு எந்த நோய் அறிகுறியும் வரவில்லை. அவருக்கு அருகில் இருந்து தேவையான அனைத்தையும் அருகிலிருந்து முகக்கவசம் அணிந்து செய்தேன்" என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, மருத்துவத் துறையில் பணிபுரியும் பரிசோதனை தலைமை ஆய்வாளர் மீனா கூறியதாவது, "ஜூலை 26ஆம் தேதி எனக்கு காய்ச்சல் வந்தது. பரிசோதனை செய்த பிறகு மருத்துவரை சந்தித்தபோது, உடனடியாக மருத்துவனையில் சேருமாறு அறிவுறுத்தினார். காய்ச்சல் 105, 106 டிகிரி வரை இருந்தது. கோவிட் உரிய அனைத்து அறிகுறிகளும் இருந்தன. கசாயம் மற்றும் நம்பிக்கையை மருத்துவர் அளித்து எனக்கு சிகிச்சையளித்தார். நுரையீரலில் அதிக அளவு நோய்த் தொற்று இருந்தாலும் என்னால் உணர முடிந்தது.