சென்னையில் தொடர்ந்து அதிகரித்துவரும் கரோனா தாெற்றினால் பொதுமக்கள், மருத்துவர்கள், செவிலியர் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுவருகின்றனர். சென்னையில் கரோனா தீவிரம் தற்போது உச்சத்தில் இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும், சென்னையிலிருந்து பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்றுகொண்டிருக்கின்றனர். கரோனா தொற்றைச் சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”சென்னை மாநகரில் கரோனா தொற்று அதிகமாகப் பரவுவதைக் கவனத்தில் கொண்டு மக்கள் நலன், வணிகர் நலன் கருதி வரும் 16ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை கடைகள் திறக்கப்படும்.