தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜவான் முதல் நாள் வசூல் இவ்வளவா? - வெளியான தகவல்! - சென்னை செய்திகள்

Jawan First Day Collection Record: நடிகர் ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படம் வெளியான முதல் நாளில் 200 கோடி ரூபாய் வரை வசூலித்து உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படம் வெளியான முதல் நாளில் ரூ. 129.6 கோடி வசூலித்து சாதனை
ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படம் வெளியான முதல் நாளில் ரூ. 129.6 கோடி வசூலித்து சாதனை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2023, 1:01 PM IST

சென்னை:இயக்குனர் அட்லி இயக்கத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் (Shah Rukh Khan) நடித்து கடந்த செப்.9 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் ஜவான் (Jawan). ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் வெளியாகி, உலகம் முழுவதும் மிகப் பெரிய வெற்றியை பெற்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் வழங்க, கௌரி கான் தயாரித்துள்ளார். மேலும், படத்திற்கு கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி உள்ளார். இந்த திரைப்படம் நயன்தாரா, தீபிகா படுகோனே, யோகி பாபு உள்ளிட்ட முன்னனி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ள நிலையில், இவரது பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. மேலும், தமிழில் இருந்து இந்திக்கு சென்ற அட்லி செய்த மிகப் பெரிய சம்பவம் தான் இந்த ஜவான் திரைப்படம். இப்படம் தமிழில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் சக்கை போடு போட்டு வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக 'ஜவான்' குவித்திருக்கும் முதல் நாள் வசூல், இதுவரை இல்லாத ஷாருக்கான் படத்தின் வசூல் எனவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் மூலம், ஷாருக்கான் தனது ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களின் இதயங்களை வென்று, பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைப்பார் என்பது ஜவான் படத்திற்கான முன்பதிவு மூலமே தெரிய வந்ததாக கூறப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:ஜெயிலர் படத்தின் சிவராஜ் குமார், மோகன்லால் மிரட்டல் தீம் மியூசிக் வெளியீடு!

ஜவான் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் என முன்பே கணிக்கப்பட்டது. அந்த வகையில், எதிர்பார்த்ததை விட 'ஜவான்' அனைவரின் கணிப்பிற்கும் அப்பாற்பட்டு, 200 கோடி ரூபாய் வரை வசூலித்து உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் அற்புதமான வெற்றியை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுவரை எந்த இந்திய படத்திற்கும் கிடைக்காத மிகப்பெரிய ஓப்பனிங், இந்த ஜவான் படத்திற்கு கிடைத்திருக்கிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்தி திரையுலக வரலாற்றில், மிகப்பெரிய தொடக்க நாள் வசூல் சாதனையையும் ‘ஜவான்’ பதிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, இனி வரும் நாட்களில் இதன் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் 650 கோடி ரூபாய் வசூலித்து சாதனைப் படைத்தது. அதனையும் ஜவான் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:கொண்டாடி கொளுத்தனும் தீ... இங்கிலாந்தில் முன்பதிவில் சாதனை படைத்த லியோ!

ABOUT THE AUTHOR

...view details