தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'போராட்ட களத்துக்கு வாருங்கள் ஸ்டாலின்..!' - அழைக்கும் மாணவர்கள் - stalin

சென்னை: "நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு கோரும் போராட்டத்தில் திமுத தலைவர் ஸ்டாலின் களம் இறங்க வேண்டும்" என்று, இந்திய மாணவர் சங்கத்தின் செயலாளர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

protest

By

Published : Jun 7, 2019, 4:58 PM IST

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தமிழ்நாட்டில் மூன்று மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். மாணவர்களின் மருத்துவ கனவை கலைத்து அவர்களை தற்கொலைக்கு தள்ளும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பு குரல் ஒலித்து வருகிறது. அந்த வகையில் இந்திய மாணவர் சங்கத்தினர் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராகவும், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரியும் கோஷங்களை எழுப்பினர்.

அப்போது பேசிய அச்சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாரியப்பன், “ மத்திய, மாநில அரசின் தவறான மருத்துவ கொள்கையால் மாணவர்கள் படுகொலை செய்வதை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. நீட் தேர்வினால் தமிழ்நாட்டில் இதுவரை எட்டு மாணவிகளும், இரண்டு பெற்றோர்களும் இறந்துள்ளனர். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக்கோரி அனைத்து ஜனநாயக சங்கங்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

மருத்துவ படிப்புக்கான இடங்களை மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நீட் தேர்வில் மத்திய அரசு, மாநில சுயாட்சியை தடுக்கும் வகையிலும் செயல்பட்டு வருகிறது.

இந்திய மாணவர் சங்கம்

நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கப்படும் என்று ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் தேர்தல் வாக்குறுதியாக அளித்தனர். இந்த உத்தரவாதத்தை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அளித்ததால்தான் தமிழ்நாடு, புதுச்சேரியில் 38 இடங்களில் திமுக கூட்டணியால் வெற்றி பெற முடிந்தது. நீட்டை எதிர்க்க ஸ்டாலின் போராட்ட களத்திற்கு வர வேண்டும். இல்லையெனில் 38 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த படுகொலையில் சம்பந்தம் இருப்பதாக கருதப்படும். மத்திய, மாநில அரசுகள் 3 மாணவிகளின் படுகொலைக்கு பொறுப்பேற்று இழப்பீடு வழங்க வேண்டும். இந்த போராட்டத்தின் மூலம் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தும் போராட்ட களத்துக்கு வர வேண்டும் என்று எதிர்க்கட்சிகளுக்கு அறைக்கூவல் விடுக்கின்றோம். நீட் தேர்வை ரத்து செய்யும் வரை இந்திய மாணவர் சங்கம் தொடர்ந்து போராடும்” என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details