சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீது 280 கோடி ரூபாய் வரை ஊழல் செய்திருப்பதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதனால், அவரை உடனடியாக துணை வேந்தர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாரியப்பன், “அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மீது 750 கோடி ரூபாய் வரை ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அவரை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும்.