விருகம்பாக்கம் காந்தி நகரைச் சேர்ந்தவர் சங்கர். தச்சுவேலை செய்துவரும் இவர், தனது முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்துவந்தார். இதற்கிடையே,சங்கர் இரண்டு மாதங்கள் தச்சுவேலை காரணமாக வெளியூர் சென்று வேலை முடித்து வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
அப்போது அவரது மனைவி கழுத்தில் அணிந்திருந்த செயின் இல்லாத காரணத்தினால் எங்கே என்று கேட்டுள்ளார். அதற்கு, ஹரிஸ் குமார் என்ற இளைஞருடன் தான் பழகிவந்ததையும், அடுக்கடி இருவரும் தனிமையில் சந்தித்துக்கொண்டதையும் சங்கரிடம் அவரது மனைவி ஒப்புக்கொண்டுள்ளார்.
உணவில் மயக்க மருத்து கொடுத்து, பாலியல் வன்புணர்வு செய்து, அதனை வீடியோ எடுத்ததாகவும் அதைக்காட்டி பலமுறை ஹரிஸ் குமார், தன் நண்பர் ரமேஷ் குமாருடன் சேர்ந்து மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.