தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பாலியல் தொந்தரவு தொடர்பாக பெண் ஊழியரிடம் விசாரணை நடத்தப்பட்டதா?' - ராஜினாமா செய்த பெண் ஊழியர்

சென்னை: பாலியல் தொல்லையால் பெண் ஊழியர் ராஜினாமா செய்த விவகாரம் குறித்து அலுவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதா? என்று தமிழக அரசும், சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளரும் விளக்கமளிக்ககோரி மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

sexual

By

Published : Jul 4, 2019, 4:02 PM IST

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் பணியாற்றி வரும் மூத்த திட்ட அலுவலர் ஒருவர், தன் ஆசைக்கு இணங்கினால் பணி ரீதியாகவும், பண ரீதியாகவும் பலனடையலாம் என தன்னுடன் பணியாற்றிய பெண் ஊழியருக்கு வாட்ஸ்அப் மூலம் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை அந்த பெண் கண்டித்தும், பாலியல் சீண்டல் தொடர்ந்ததால், உயர் அலுவலர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் ஏற்பட்ட விரக்தியில், வேலையை ராஜினாமா செய்துள்ளார்.

இதுதொடர்பான தகவல்கள், பெண் ஊழியருக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியானது தொடர்பாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. பத்திரிகை செய்தி அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். அந்த வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, சிஎம்டிஏ-வில் விசாகா குழு அமைக்கப்பட்டுள்ளதா, பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் புகார் அளித்துள்ளார்களா?

இந்த விவகாரத்தில் தொடர்புடைய பெண் மற்றும் பாலியல் தொந்தரவு கொடுத்த அலுவலர் யார் என்று உறுப்பினர் செயலர் விசாரித்தாரா? செய்தியில் வெளியாகியுள்ள தகவல்படி பாதிக்கப்பட்ட பெண் ராஜினாமா செய்ய வற்புறுத்தப்பட்டாரா? என்ற கேள்விகளை எழுப்பி, தமிழ்நாடு வீட்டு வசதித் துறை செயலாளர், சென்னை சிஎம்டிஏ உறுபினர் செயலர் ஆகியோர் நான்கு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.

ABOUT THE AUTHOR

...view details