சென்னை கானாத்தூர் உத்தண்டியில் வசித்துவரும் தொழிலதிபர் ஒருவர் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜூலை 10ஆம் தேதி புகார் ஒன்றை அளித்தார். அதில் "எனது 13 வயது மகள் நாவலூரிலுள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்துவருகிறார். அவர் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாவார்.
அதனால் அவருக்கு மன அழுத்தத்தைக் குறைக்க திருவொற்றியூரைச் சேர்ந்த மகேஷ்(42) எனும் பயிற்சியாளரை நியமித்தேன். அவர் தினமும் வீட்டிற்கு வந்து பயிற்சியளித்து வந்தார்.