தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒன்றரை வயது குழந்தைக்கு பாலியல் சீண்டல் - 19 வயது இளைஞர் போக்சோவில் கைது! - Tambaram Women Police Department Action

சென்னை: தாம்பரத்தில் ஒன்றரை வயது குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கஞ்சா ஆசாமி

By

Published : Nov 12, 2019, 7:44 PM IST

சென்னையை அடுத்த தாம்பரம் கன்னடபாளையம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (19). கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான இவர் கஞ்சா விற்பனையும் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் ரமேஷின் வீட்டு அருகே கூலி வேலை செய்யும் பெண் தொழிலாளி, தனது ஒன்றரை வயது குழந்தையுடன் வசித்து வருகிறார். அந்த பெண்ணின் ஒன்றரை வயதுக் குழந்தையை ரமேஷ் அடிக்கடி தூக்கி விளையாடிக் கொண்டிருப்பது வழக்கம்.

இதேபோல் நேற்றுமுன்தினமும் ரமேஷ் குழந்தையைத் தூக்கி விளையாடிக் கொண்டிருந்த போது, குழந்தைக் கதறி அழுதுள்ளது.

இதைப் பார்த்த ரமேஷ் குழந்தையை வீட்டில் விட்டு விட்டு, தப்பிச் சென்றுள்ளார். இதைப் பார்த்த குழந்தையின் தாய் அருகில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தையை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், பாலியல் சீண்டலுக்கு உள்ளாகியிருப்பதைக் கண்டறிந்தனர்.

பின்னர் இது குறித்து குழந்தையின் தாய் கொடுத்தப் புகாரின் பேரில், தலைமறைவாக இருந்த ரமேஷை போக்சோ சட்டத்தில் கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.


இதையும் படிங்க: பாலியல் வன்புணர்வு செய்து பள்ளி மாணவி கொலை - போக்சோவில் இளைஞர் கைது!

ABOUT THE AUTHOR

...view details