தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துப்பட்டா அணியாத பெண்களே டார்கெட்..! - சென்னையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர் கைது - போலிஸ்

மார்டன் உடையில், சுடிதார் அணிந்து துப்பட்டா அணியாமல் தனியாக வரும் பெண்கள் மேல் மோகம் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.

sexual harassment- man arrested in chennai
துப்பட்டா அணியாத பெண்கள் தான் டார்கெட்- பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் கைது

By

Published : May 28, 2023, 4:32 PM IST

சென்னை:சென்னை திருமங்கலத்தில் 17 வயதுடைய பள்ளி சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அனைத்து மகளிர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது, உரிய நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வரும் நிலையிலும், அதுதொடர்பான குற்றங்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை என்பதே வேதனைக்குரியது. தலைநகர் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.

சென்னையில், தனியாக சாலையில் நடந்து செல்லும்பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சரவணன் என்பவரை, அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனைத்தொடந்து, சரவணனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை அண்ணா நகர் ஜெஜெ நகர், திருமங்கலம், பெரவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் தனியாக சாலையில் செல்லும் பெண்கள் மற்றும் மார்டன் உடையில், சுடிதார் அணிந்து துப்பட்டா அணியாத பெண்களிடம் பாலியல் சீண்டல் அரங்கேறும் சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வந்து உள்ளன. இதுகுறித்து தொடர்ந்து புகார்கள், பொதுமக்களிடம் இருந்து வந்த நிலையில், போலீசார் உடனடியாக களத்தில் இறங்கினர்.

பொதுமக்களின் இந்த புகாருக்கு விரைவில் தீர்வு காணும் வகையில், திருமங்கலம் காவல் சரக உதவி ஆணையர் வரதராஜன் தலைமையில் தனிப்படை அமைத்து, அண்ணா நகர் ஜெஜெ நகர், திருமங்கலம், பெரவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அதை ஆய்வுக்கு உட்படுத்தினர்.

இந்த ஆய்வின் முடிவில், தனியாக சாலையில் செல்லும் பெண்கள் மற்றும் மார்டன் உடையில், சுடிதார் அணிந்து துப்பட்டா அணியாத பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஒரே நபர் ஈடுபட்டது தெரியவந்தது. அந்த நபர் சென்னையைச் சேர்ந்த சரவணன் என்பது தெரியவந்தது. தேடுதல் வேட்டைக்குப் பிறகு போலீசார், சரவணனை கைது செய்ய முயன்ற போது, போலீசாரை பார்த்ததும் தப்பிக்க எண்ணி ஓட்டம் பிடித்தார். இதனைத்தொடர்ந்து சரவணன் எதிர்பாராதவிதமாக, சாலையோரம் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்தார். இந்த விபத்தில், சரவணனுக்கு பல இடங்களில் அடிபட்டதுடன், கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டது.

இதனையடுத்து சிகிச்சைக்காக, சென்னை அரசு ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரவணன், சிகிச்சைக்குப் பின், காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் போலீசார் அவரிடம் செய்த விசாரணையில், இவர் தான் கடந்த 2 மாதமாக, இப்பகுதியில் பல பெண்களிடம் இதுபோன்ற செயல்களை செய்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து சரவணன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அம்பத்தூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: Sengol: புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் செங்கோல்.. வரலாறும், சர்ச்சையும்!

ABOUT THE AUTHOR

...view details