தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்த நபரின் ஜாமீன் மனு தள்ளுபடி! - chennai principle court

சென்னை: குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்த நபரின் ஜாமீன் மனு தள்ளுபடி!
மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்த நபரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

By

Published : Sep 12, 2020, 5:05 PM IST

சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 36 வயதான பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.

அதே பகுதியில் வசிக்கும் தனது தோழியை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது தோழியின் கணவர் மகேஷ்குமார் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, அவரை பாலியல் வன்புணர்வு செய்ததோடு, நிர்வாணமாக படம் எடுத்து வைத்துள்ளார்.

நிர்வாண படத்தை காண்பித்து மிரட்டி அப்பெண்ணிடம் இருந்து சுமார் 100 பவுன் நகை மற்றும் ஏராளமான பணத்தை மிரட்டி பெற்றுக் கொண்டதாகவும், அதனை திருப்பி கேட்ட போது தன்னையும் தனது கணவர் மற்றும் குழந்தைகளையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுவதாகவும், பாதிக்கப்பட்ட பெண் சார்பில் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுதவிர பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு அடியாட்களை அழைத்துவந்து மிரட்டியதாகவும், அப்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாகவும் ராயபுரம் காவல் நிலையத்தில் மகேஷ்குமார் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் ஏற்கனவே ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீன் பெற்று விட்ட நிலையில் மீதமுள்ள இரண்டு வழக்குகளில் ஜாமீன் வழங்கக்கோரி மகேஷ்குமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்து மிரட்டியவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று உத்தரவிடக்கோரி புகார்தாரரான பாதிக்கப்பட்ட பெண் சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் மீண்டும் வந்து தனக்கு தொல்லை கொடுப்பார் எனவும், ஆதாரங்களை அழித்து விடுவார் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த முதன்மை அமர்வு நீதிபதி செல்வகுமார், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details