தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கழிவுநீரால் தேங்கிய விமான நிலையம்; பயணிகள் அவதி! - airport

சென்னை: சர்வதேச விமானநிலையத்தின் உள்நாட்டு வருகை பகுதியில் தேங்கி இருக்கும் கழிவு நீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

airport

By

Published : Aug 7, 2019, 9:35 AM IST

சென்னை சர்வதேச விமான நிலையத்தின் உள்நாட்டு வருகை பகுதியில் கட்டண கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை, பயணிகள் பயன்படுத்தி வரும் நிலையில், சுமார் பத்து நாட்களாக கழிப்பறையில் இருந்து வெளியாகும் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கிறது.

கழிவுநீரால் தேங்கிய விமான நிலையம்

இந்த கழிவுநீரில் ஆயிரக்கணக்கான கொசுக்கள் உற்பத்தியாகி வருவதாகவும், இதன்மூலம் தொற்று நோய் பரவும் அபாயமும், சென்னை விமான நிலைய முழுவதும் துர்நாற்றம் வீசிவதாகவும் விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக, பல முறை விமான நிலைய அலுவலர்களிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று துப்புரவு தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details