சென்னை:குரோம்பேட்டை அரசு போக்குவரத்து பயிற்சி மையத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கான 14ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக 7ஆவது கட்டப்பேச்சுவார்த்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் தற்போது தொடங்கி உள்ளது. இப்பேச்சுவார்த்தையில் போக்குவரத்துத்துறைச்செயலாளர் கோபால், நிதித்துறை கூடுதல் செயலாளர் அருண் சுந்தர் தயாளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குரோம்பேட்டை அரசு போக்குவரத்து பயிற்சி மையத்தில் ஏழாம் கட்ட ஊதிய ஒப்பந்தப்பேச்சுவார்த்தை... - அண்ணா தொழில்சங்கம்
குரோம்பேட்டை அரசு போக்குவரத்து பயிற்சி மையத்தில் 14ஆவது ஊதிய ஒப்பந்தத்திற்கான ஏழாம் கட்ட பேச்சுவார்த்தை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் தொடங்கியுள்ளது.
இதில் தொமுச, அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு உள்ளிட்ட 66 தொழிற்சங்கங்கள் பங்கேற்று உள்ளன. ஏற்கெனவே ஆறு கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் 90 விழுக்காடு பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் மீண்டும் இன்று பேச்சுவார்த்தை நடக்கிறது. பே மேட்ரிக்ஸ், போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை குறித்து இன்றைய பேச்சுவார்த்தையில் பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:இனிமேல் வளையோசை... பாட்டு கமல் மாதிரி பண்ண முடியாது... அரசின் புதிய விதிமுறைகள் என்னென்ன...?
TAGGED:
ஏழாம் கட்ட பேச்சுவார்த்தை