சென்னையில் சாலையோரத்தில் தங்கி குப்பை பொறுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தவரின், இரண்டரை வயது மகளுக்கு பாலியல் தொல்லை அளிக்க முயற்சிசெய்துள்ளார். இதனைப்பார்த்த குழந்தையின் தாய் அளித்தப் புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இரண்டரை வயது குழந்தைக்குப் பாலியல் தொல்லை - இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை
இரண்டரை வயது குழந்தையை பாலியல் தொல்லை அளிக்க முயன்ற இளைஞருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கை நேற்று (நவ.1) விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, அருண் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக்கூறி, அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூபாய் 5ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாருக்கு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நான்கு மாத கர்ப்பிணியை முன்னாள் காதலன் கழுத்தை நெரித்துக்கொன்ற கொடூரம்