தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏழு தமிழர்கள் விடுதலை: அனைவரும் ஏற்கும் முடிவை முதலமைச்சர் எடுப்பார் - அமைச்சர் ரகுபதி. - நீட் தேர்வு

ஏழு தமிழர்கள் விடுதலையில் சட்டச் சிக்கலை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். முதலமைச்சர் அவைகளில் சிக்கிக் கொள்ளாமல் உரிய முடிவை எடுப்பார் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ரகுபதி

By

Published : Jul 6, 2021, 3:16 AM IST

Updated : Jul 6, 2021, 7:06 AM IST

மதுரை:சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று (ஜூலை 5) மதுரை மத்திய சிறைச் சாலையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் சிறைத்துறை டி.ஐ.ஜி பழனி, கண்காணிப்பாளர் தமிழ் செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், " மதுரை மத்திய சிறையில் தற்போது 1,562 கைதிகள் உள்ளனர். அவர்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் கேட்கப்பட்டுள்ளன.

இந்த சிறைச்சாலை ஆங்கிலேயர் காலத்து கட்டிடம் என்பதால் இங்குள்ள வசதிகளை அதிகரிக்க கைதிகள் கோரிக்கை வைத்துள்ளனர். சிறைச்சாலையை வேறிடத்தில் அமைக்க முதலமைச்சரின் ஆலோசனையோடு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சிறைக் கைதிகள் மீது தமிழ்நாடு முதலமைச்சர் மிகுந்த அக்கறை கொண்டவர். சிறைச்சாலையில் மருத்துவ வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம். விடுதலை கோரும் கைதிகள் குறித்து பரிசீலனை செய்யப்படும்.

அனைவரும் ஏற்கும் முடிவு

ஏழு தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் குடியரசு தலைவருக்கு அறிக்கை அனுப்பி உள்ளார். உரிய முடிவு எடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார். அவரை கட்டாயப்படுத்த முடியாது.

மதுரை சிறையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆய்வு

இந்த விவகாரத்தில் நிறைய சட்ட சிக்கல்களை உருவாக்க பார்க்கிறார்கள். முதலமைச்சர் அதில் எந்த சிக்கலிலும் சிக்கிக் கொள்ள மாட்டார். அந்த விவகாரத்தில் அனைவரும் ஏற்கும் முடிவை முதலமைச்சர் எடுப்பார்.

நீட் தேர்வு குறித்த ஆய்வுக் குழு மக்களின் கருத்துக்களை பெறவே நியமிக்கப்பட்டு உள்ளது. நீதிமன்றங்களுக்கு எதிராக அந்த குழு உருவாக்கப்படவில்லை. அந்த ஆய்வுக்குழு சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டே நியமிக்கப்பட்டு உள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனின் பரோல் குறித்து அவரின் தாயார் மனு கொடுத்தால் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க:'அவருக்கு நேர்ந்த துயரம் இனி எவருக்கும் நிகழக்கூடாது' - ஸ்டேன் சுவாமிக்கு முதலமைச்சர் இரங்கல்

Last Updated : Jul 6, 2021, 7:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details