தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது - Chennai MGR nagar Cannabis sale

சென்னை: பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 11 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

cannabis sale

By

Published : Nov 17, 2019, 5:44 PM IST

சென்னை அசோக்நகர், எம்ஜிஆர் நகர் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் உட்பட பலருக்கு சகஜமாக கஞ்சா கிடைப்பதாக காவல் துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தபடி இருந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, எம்ஜிஆர் நகர், அசோக்நகர் பகுதிகளில் சிலர் கஞ்சா விற்பனை செய்து வருவது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தர்ஷன், குமார், கவுதமன், கோதண்டன், ராஜேஸ்வரி, நாகம்மாள், லட்சுமி உள்ளிட்ட ஏழு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா

அவர்களிடம் சோதனையிட்டதில் 11 கிலோ கஞ்சா மற்றும் ரூ. 65 ஆயிரம் பணம் உள்ளிட்டவற்றையும் எம்ஜிஆர் நகர் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: 10 ஆண்டுகளாக சேமித்துவைத்த போதைப்பொருள்கள் அழிப்பு!

ABOUT THE AUTHOR

...view details