இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "செம்பரம்பாக்கம் ஏரி 24 அடியில் 22 அடி நிரம்பியதால் நண்பகல் 12 மணி அளவில் ஆயிரம் கன அடி திறக்கப்படும் என பொதுப்பணித் துறை அறிவித்திருந்தது.
செம்பரம்பாக்கம் ஏரி இன்று மதியம் 12 மணிக்கு திறப்பு!
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி இன்று மதியம் 12 மணிக்கு திறக்கப்படுவதால், தாழ்வான இடத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக மாநகராட்சி நிவாரண முகாமில் தங்குமாறு ஆணையர் பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனால் வெளியேற்றப்படும் நீரானது ஆற்றின் வழியாக கடலில் கலப்பதால், ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள், குறிப்பாக முக்கியமாக மண்டலமான 10, 11, 12, 13 ஆகிய பகுதியில் வசிக்கும் மக்கள் அருகில் உள்ள மாநகராட்சி நிவாரண முகாமுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறது.
மாநகராட்சியில் 169 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் சந்தேகங்கள், பிரச்னைகளுக்கு அவசர எண் 1913-க்கு அழைக்க வேண்டும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்க உத்தரவு