சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் உயர்கல்வி மற்றும் பள்ளி கல்வித் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று (ஆக.26) நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சட்டப்பேரவைத் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “பாஜக ஒன்றிய அரசு தமிழையும், தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் தொடர்ந்து புறக்கணிக்கின்றது.
டெல்லி பல்கலைக்கழகத்தில் அகற்றப்பட்ட தமிழ் நூல்கள்
அதன் தொடர்ச்சியாக டெல்லி பல்கலைக்கழகத்தில் பாமா, சுகிர்தராணி எழுதிய தமிழ் நூல்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டுள்ளன. இது ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை ஆதிவாசி மக்களின் நிலையை விளக்கும் புத்தகம் ஆகும். இந்த புத்தகத்தை எதற்காக பாஜக அரசு அகற்ற வேண்டும்?.
2007ஆம் ஆண்டு நடைபெற்ற கருணாநிதி ஆட்சியில், புதுடெல்லி பல்கலைக்கழகத்தில் தனியாக நிதி ஒதுக்கி தமிழை வளர்த்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டு, தமிழ் நூல்கள் புறக்கணிக்கப்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க:உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் - இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம்