இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "எல்.ஐ.சி. பங்குகளை ஐ.பி.ஒ.(IPO) மூலம் பங்கு சந்தைகள் வழியாக தனியாருக்கு விற்பனை செய்வது மிகவும் ஆபத்தானது. இது பொன்முட்டையிடும் வாத்தை அறுப்பதற்கு சமமானது. இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.
"எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வது ஆபத்தானது" - பாமக ராமதாஸ்
சென்னை: எல்.ஐ.சி. பங்குகளை பங்கு சந்தைகள் வழியாக தனியாருக்கு விற்பனை செய்வது மிகவும் ஆபத்தானது என பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்.
pmk-ramadas
தமிழ்நாட்டில் பாஜக, அதிமுக, பாமக கட்சிகள் கூட்டணி அமைத்து செயல்படும் நிலையில், ராமதாஸின் இந்தப் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அரசின் பொது பட்ஜெட் குறித்து நாடாளுமன்றத்தில் பேசியபோது மத்திய அரசிடம் இருக்கும் எல்.ஐ.சி. பங்குகள் விற்பனை செய்யப்படும் என அறிவித்தது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க:பயனாளிக்கு தரவேண்டிய ரூ. 26.67 லட்சத்தை எல்.ஐ.சி உடனடியாகச் செலுத்த உத்தரவு!