தமிழ்நாட்டில் காவல்துறையில் ஓய்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காலியாகும் பணியிடங்களுக்காக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இரண்டாம் நிலைக் காவலர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆயுதப்படை, சிறப்புக் காவல்படை, சிறைத்துறை, தீயணைப்புத் துறைக்கு என தனித்தனியாக தேர்வு செய்யப்படுவர். இது குறித்த அரிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
மாநிலத்தில் காலியாக உள்ள 10 ஆயிரத்து 906 காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் செப்டம்பர் 26ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 26 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 13ஆம் தேதி எழுத்துத்தேர்வு நடக்கும். இந்த எழுத்துத்தேர்வு மாவட்டவாரியாக நடக்கும்.