தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதல் மனைவி துன்புறுத்தல் - விசாரிக்க மறுக்கும் போலீஸ்... - காதல் காவலர் மீது மனைவி புகார்

காதல் மனைவியை ஏமாற்றி திருமணம் செய்து துன்புறுத்தும் காவலர் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

காதல் மனைவியை துன்புறுத்தும் காவலர்
காதல் மனைவியை துன்புறுத்தும் காவலர்

By

Published : Jul 10, 2022, 1:28 PM IST

விழுப்புரம்: கண்டாச்சிபுரம் அடுத்த கீழ்வாலை கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்யராஜ் (29). இவர் சேலையூர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிகிறார். இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த (27) வயது பெண்ணுக்கும் அறிமுகம் ஏற்பட்டது.

நாளடைவில் இருவரும் நண்பர்களாக பழகி காதலித்துள்ளனர். கடந்தாண்டு சென்னை பெரியமேடு சார்-பதிவாளர் அலுவலகத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் நான்கு மாதங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் அதன்பின் அந்த பெண்ணுடன் சேர்ந்து வாழ மறுத்த காவலர், அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

மேலும் அந்த பெண்ணை ஜாதி பெயரை சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் அவர் பணிபுரியும் கல்லுாரிக்குச் சென்று தாக்கியுள்ளதாக அப்பெண் தெரிவித்துள்ளார். இது குறித்து சேலையூர் உதவி ஆனையரிடம் அப்பெண் புகார் அளித்தார். ஆனால் பாக்யராஜ் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து அவர் தாம்பரம் காவல் ஆனையர் அலுவலகத்திலும் புகார் அளித்தும், காவல் துறையினர் விசாரணையில் மெத்தனம் காட்டி வருவதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ஓடி போகலாம் வா... காதலனின் அழைப்பை மறுத்த காதலி வெட்டி கொலை...

ABOUT THE AUTHOR

...view details