தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலகத்தில் நடக்காததையா ராகவன் செய்துவிட்டார் - சீமான் - சீமான்

சென்னை: உலகத்தில் நடக்காததையா ராகவன் செய்துவிட்டார் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சீமான்
சீமான்

By

Published : Aug 30, 2021, 4:10 PM IST

தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில பொதுச்செயலாளர் கே.டி. ராகவன் குறித்த வீடியோ சமீபத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வீடியோவை தொடர்ந்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்பான ஆடியோவும் வெளியானது.

இந்த விவகாரத்தில் ராகவனை ஒருதரப்பினரும், வீடியோவை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரனை ஒருதரப்பினரும் விமர்சித்துவருகின்றனர்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ ராகவனின் அனுமதி இல்லாமல் அவரது படுக்கையறையிலும், கழிவறையிலும் கருவி வைத்து படம் எடுப்பது சமூக குற்றம்.

முதலில் வீடியோவை வெளியிட்டவரை கைது செய்திருக்க வேண்டும். உலகத்தில் நடக்காத ஒன்றை அவர் செய்ததாக காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

சட்டப்பேரவைக்குள் வைத்தே ஆபாச காட்சிகளை பார்த்தனர். தனிப்பட்ட முறையில் ராகவன் செய்ததை பதிவு செய்து வெளியிடுவதால் என்ன சாதிக்க முடியும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details